​கீரனூர் சிவபெருமான் 'ஆதீஸ்வரன்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். சிவன் கோவிலில் உள்ள அம்மன் 'அகிலாண்டீஸ்வரி'. சிவன் கோவில் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியன உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் பல அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. சிவலிங்கம் கிழக்கே நோக்கி உள்ளது.


சிவன் ஆலயங்களில் பெரும்பாலானவை அம்மன் ஆலயம், சிவன் கோயிலுக்கு இடப்பக்கம் இருப்பது தான் இயல்பு.  ஆனால், கீரனூரில் அம்மன் சன்னதி கடவுளின் சிவன் ஆலயத்திற்கு வலப்பக்கம் உள்ளது. இவ்வாறு அம்மன் சன்னதி வலப்பக்கம் அமைந்திருக்கும் ஆலயத்தில் சிவன், பார்வதி அவர்களின் திருமண நேரத்தில் மாமனிவர் அகத்தியர் பார்த்தார் என்பது மரபு. 


கன்னி மூலையில் மகா கணபதி எழுந்தருளியுள்ளார். தல விநாயகராக இவர் உள்ளார்.

ஆதீசுவரர் சன்னதிக்கும் அகிலாண்டீஸ்வரி சன்னதிக்கும் இடையில் வள்ளி தெய்வானை சமேதமாக சுப்பிரமணியர்  கோவில் உள்ளது. இவ்வாறு அமையப்பெற்ற கோயில் சோமாஸ்கந்த வடிவமான கோயில் என்பது ஐதீகம். சிவன் பார்வதி திருமணக்கோலத்தில் இருப்பதும், சோமாஸ்கந்த வடிவமான கோயிலாக  இருப்பதும், வழிபடுவதற்குச் சிறந்த ஆலயமாக இச்சிவாலயம் அமைந்துள்ளது.


வடக்கில், நவகிரக ஆலயம் உள்ளது. வடக்கில், பைரவர் மற்றும் தெற்கில் சூரியன் உள்ளது. ஒரு வருடத்தில், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு, சிவலிங்கத்தை, தனது  சிவப்பு கதிர்களை கொண்டு சூரியன் வழிபடுவர். அபபோது சூரிய ஒளி ஆதீசுவர  லிங்கத்தின் மீது படும். தற்போது சன்னதிக்கு வெளியில் உள்ள தேங்காய் மரங்கள் காரணமாக இது தடைபடுகிறது. சண்டிகேஸ்வரர் மற்றும் தாட்சினமூர்த்திக்கு சிவன் கோயில் சிவன் ஆலயத்தின் விதிகள் படி ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


சிவன் கோயிலின் வளாகத்திற்குள் கன்னி மூலையில் வீரநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இங்கே பெருமாள் கிழக்கு முகம். இங்கே தாயாருக்கு தனி சன்னதியில்லை. அதற்கு பதிலாக, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி (பூமா தேவி) ஆகியோருடன் இறைவன் எழிந்தருளியுள்ளார். இந்த வீரநாராயண பெருமாள் கோவில் கருவறை மற்றும் ஆர்த மண்டபம் மட்டுமே உள்ளது. பெருமாளுக்கு மஹா மண்டபம் இல்லை. ஆலயத்துக்கு வெளியே கருட கம்பம் உள்ளது, அதே சங்கு சக்ரம் மற்றும் அஞ்சனேயர் குறிக்கப்பட்டுள்ளது. அர்த மண்டபத்தில், கருடாழ்வார், நகரி, அனுமர் மற்றும் கணேசாழ்வார் ஆகியோர் உள்ளனர்.


பொதுவாக பிரம்மாவுக்கு தனியாக கோயில்களோ அல்லது ஆலயங்களோ இல்லை. நான்கு சமய குரவர்கள் பாடிய பாடல்களுக்கான சிறப்பம்சம் கொண்ட கொடுமுடி மகுடீஸ்வரர் கோவிலில் மட்டுமே பிரம்மாவுக்கு தனி சன்னதி இருக்கிறது.


காங்கேய நாட்டில், 14 ஊர்களில் கீரனூரில், ஆதீஸ்ரவர் கோவில் வளாகத்திற்குள் மட்டும், பிரம்மாவுக்கு ஒரு தனி சன்னதி உள்ளது.வன்னி மரத்தினி கீழ் பிரம்மா நான்முகம் தாங்கி கிழக்கு நோக்கி உள்ளார். எனவே, இந்த ஆத்தீஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு அம்சம் உள்ளது. அனைத்து மூர்த்திகளும் (மூன்று மூர்த்திகள் - சிவன், விஷ்ணு, இறைவன் பிரம்மா) ஒரே கோவிலில் உள்ளனர். எனவே பக்தர்கள் இந்த சமைய சிறப்பை உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து, அனைவரும் நம் கோயிலுக்கு வந்து கடவுளின் கிருபை பெற வேண்டும்.


Keeranur SivaPerumaan is known by the name 'Aadheeswaran'. The Amman in the Siva Temple is 'Akilaandeeswari'. 

Generally in most of the Sivan Temples Goddesses Amman Shrine will be left to the God Shiva's Shrine. .But, in Keeranur, Goddesses Amman Shrine is right to God Shiva's Shrine. Generally such Shrines, where the Amman is right to Lord Siva is where the Maamunivar Agathiyar has seen and worshipped Sivan-Parvathi in their Marriage moment. Goddesses Akilanda Easwari is facing East. 

The Siva Temple is a large temple with Ganapthi in the Kanni Moolai, right to Goddesss Parvathi's Shrine. Maha Ganapthi or the Sthala Ganapathi is facing east. Between Lord Shiva and Lord Parvathi is Lord Murugan along with Valli and Theivaanai, also east facing. Such a position is called Somaskandha position and is special place for worshipping. 

Lord Shiva's shrine has Karuvarai, Artha Mandapam and Maha Mandapam. In the pillars that are present in the Mahamandapam, many beautiful sculptures are found. The ShivaLingam is east facing. 


In the north east, there is navagraha shrine. In the north, there is Bhairavar and in the south, there is Suriyan. In a year, for one or two days, the Sun worships the Lord Shiva by putting his rays on the shiva Lingam. Currently due to the Coconut trees outside of the shrine, this has not been happening. The Shrines for Sandikeswarar and Thatchinamoorthy are as place the rules of a Shiva temple. 

Within the campus of the Shiva temple, in the Kanni moolai is the VeeraNarayana Perumal temple too. The Perumal here is east facing. There is no separate Sannathi or Shrine for Thaayar here. Instead, the Lord himself is associated with SreeDevi and BooDevi (BhoomaDevi) and graces hislydevotees. This VeeraNarayana Perumal temple has only Karuvarai and Artha Mandapam. There is no Maha Mandapam for this Perumal. Outside the temple, there is Karuda Kambam and in the same Sangu Sakram and Lord Anjeneyar are scripted there. In the Artha mandapam, Karudaalvar, Nagar, Anumaar and Ganeshaalwar are present and all are east facing. 


Usually there are no separate Temples or Shrines for the Lord Brahma who does the production work! Only in Kodumudi Magudeeswarar temple, which has the speciality for the poems sung by all the four Samaya Kuravarkal, there is a separate shrine for Lord Brahma. 

In the Kangeya Naadu, out of the 14 places, only in Keeranur, there is a separate Shrine for Lord Brahma, within the campus of Aadhesswar Kovil. 

Hence this also forms a speciality for this Aadheeswarar temple, as all the mummoorthis (Three Moorthys - Lord Siva, Lord Vishnu, Lord Brahma) are present in a single temple and hence devotees should get God's grace by visiting this speciality Shrine. Keeranur Akilandeswari Udanamar Aadhiswara Swamy Urchavar
Keeranur Arulmigu Selvanayaki Amman

அருள்மிகு செல்வநாயகி அம்மன் மற்றும் அகிலாண்டீஸ்வரி சமேத ஆதீஸ்வரர் திருக்கோயில் , கீரனூர், காங்கேயம்.